2010 ஆம் ஆண்டு கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த ஒருவரின் முஸ்கான் (10)என்ற மகளையும், ரித்திக் (7) என்ற மகனையும் தனியார் பள்ளி வேன் டிரைவர் மோகன்ராஜ் கடத்திச்சென்று பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டினான். இதையடுத்து போலீசார் விசாரித்த நிலையில் மறுநாள் பொள்ளாச்சி பி.ஏ.பி. வாய்க்காலில் குழந்தைகள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் மோகன் ராஜையும், உடந்தையாக இருந்த மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். இதில் மோகன்ராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.
மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.சென்னை உயர்நீதிமன்றமும்.உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்தன. இதையடுத்து வரும் 20 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில் தண்டனையை மறு ஆய்வு செய்ய மனோகரன் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தூக்குதண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து வழக்கை அடுத்த மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.