இறந்தவர் உடலை மி.வா. அலுவலகத்தில் வைத்து போராட்டம்!

116
Spread the love

சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சேதுராஜன்(33) என்பவர் நேற்றிரவு தெரு நாய்க்கு உணவு அளிக்க, தனது வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது வீட்டருகே சேதமடைந்த நிலையில் இருந்த ஒரு மின்கம்பம் அவர் மீது சாய்ந்தது. இது  மின்கம்பிகள் அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சேது அலறினார். இதைக் கேட்ட அப்பகுதி மக்கள், ஓடி வந்து அவரை  மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 க்கு அவரது மனைவி போன் செய்தபோது அவர்கள் வர இயலாது என்று பதில் அளித்தனர். இதையடுத்து மற்றொரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மதியம் 2.30 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் உடலை சிட்லபாக்கம் துணை மின்நிலைய வளாகத்துக்கு கொண்டு வந்து போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட மின்கம்பம் சேதமடைந்துள்ளதாக பலமுறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற  தீனா என்ற 14 வயது சிறுவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY