5 ஆயிரம் பைன் மேட்டர் தான்… திருச்சி சிட்டில “ஹாட்-டாப்பிக்” ….

390
Spread the love

ஸ்ரீரங்கம் பார்த்தா, சந்துகடை காஜா, பொன்மலை சகாயம் மூன்று பேரும் நின்று கொண்டிருக்க சைக்கிளில் கேனுடன் வந்த சுப்புனி வணக்கம் மட்டும் போட்டவாறு  போய்கிட்டே இருந்தார். இதனால 3 பேரும் ஒருவர் பார்த்து திகைக்க ரிலாக்ஸ் ஆன சகாயம்…. ‘பாவம் அவர் 5 ஆயிரத்துக்கு எங்க போவரு?’ என்று ஆரம்பிக்க காஜா பாயும், பார்த்தாவும் சகாயம் பக்க திரும்ப,  அவரே ‘பொன்மலை சர்வீஸ் ரோட்டுல கேன்னில் வைத்து ஒருவர் டீ வித்துக்குட்டு இருந்திருக்காரு…. அந்த பக்கமா போன  இன்ஸ்பெக்டர் ஓருத்தர் ஜீப்ப நிறுத்தி சாராய வியாபாரிய பிடிக்குறமாதிரி சுத்தி வளைச்சு பிடிச்சுருக்கார்…. அவர கண்டிச்சு விட்டிருந்தா பரவாயில்ல… ஆனா அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் பைன போட்டுருக்காரூ…. என்று சகாயம் சொல்ல…. ‘அதான் தொியுமேப்பா…. சிட்டி முழுக்க ஹாட் டாபிக்கா இதுதான் ஓடி கிட்டுக்கு இருக்கு’ என்ற பார்த்தாவை இடை மறித்த சகாயம்..‘அட அது இல்லப்பா…. இப்பதான் மேட்டருக்கே வர்றேன்…. பாதிக்கப்பட்ட டீக்கடைக்காரர்…… ஒரு மாசமாக வெயில்லயும், மழையிலயும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது…. இப்படி ஒரே நிமிஷத்துல பைன்னுன்ற பேர்ல போலீஸ் புடுங்கிடுச்சேனு டீக்காரர் புலம்றாராம்’…  என முடிக்க.. ‘ அது சரி அதான் சுப்புனி இவ்வளவு வேகமா காபி கேனோட கே. கே. நகர் பக்கமாக  போறாரா..? அப்ப இன்னைக்கு ஒன்லி மேட்டர்…. நோ காபி’ என்று  பாய் சொல்ல…. பெருமூச்சு விட்டபடி மூவரும் வீடு நோக்கி நடையை கட்டினர். 

LEAVE A REPLY