இன்று தர்மபுரி மாணவன் ஆதித்யா தற்கொலை ..

177
Spread the love

நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தருமபுரி மாணவர் ஆதித்யா என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு எழுத 2-ம் முறையாக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.  இன்று ஒரே நாளில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதால் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY