தஞ்சை ஜூவல்லரி ஓனர் குடும்பம் திருச்சியில் தற்கொலை

421

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊருணிபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு(48).  நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் (வயது 43) என்ற மனைவியும் நிகில் (வயது 20) முகில் (வயது 14) என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் நிகில் மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் திருச்சி இபி ரோட்டில் உள்ள ஸ்ரீ மகாராஜா ரெசிடென்சி என்ற ஓட்டலில் தனது மனைவி இரு குழந்தைகளுடன் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.  இரவு 9.30 அளவில் செல்வராசு தனது உறவினரான குரு கணேஷ் ( வயது 22) என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்ததன் பேரில் குரு கணேஷ் செல்வராசு தங்கியிருந்த ஒட்டல் ரூமுக்கு வந்து பார்த்தபோது கழுத்து அறுபட்ட நிலையில் செல்லம், முகில், நிகில் ஆகியோர் இறந்த நிலையிலும் செல்வராஜ் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் உயிருக்கு போராடிய செல்வராசுவை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து
கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற செல்வராசு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மனவளர்ச்சி குன்றிய தனது மகனை வளர்ப்பது, கடன் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY