சூடானில் பயங்கர தீவிபத்து..18 இந்தியர்கள் பலி

81

ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகர் கார்டோவின் பாஹ்ரி என்ற இடத்தில் சலூமி என்ற செராமிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அந்த தொழிற்சாலையில் காஸ் சிலிண்டர்  வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. இதில் ஆலைக்குள் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். தீ ஆலை முழுவதும் பற்றியதால் வெளியே வர முடியாமல் தீயில் கருகி பலியாயினர். முதற்கட்ட தகவல்படி 23 பேர் பலியாகியிருப்பதாகவும் இதில் 18 பேர் இந்தியர்கள் என்றும் அதில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது .

இது குறித்து தகவல் வந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து விபரங்கள் அறிய சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் +249 921917471 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

LEAVE A REPLY