சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. கடந்த ஜனவரியில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் ரூ.25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. ஜூன் மாதம் 26 ஆயிரத்தையும், ஆகஸ்ட்டில் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 28,944 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ. 43 குறைந்து 3545 க்கும், சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.28,360க்கு விற்றது.  இன்று வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.48.20க்கு விற்றது. ஒரு கிலோ வெள்ளி விலை 48,200 ரூபாயாக உள்ளது.

 தங்கத்தின் விலை 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை எட்டியது. 2017ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி இது 22,000 ரூபாயாக அதிகரித்தது. அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து வந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY