சுக்குவின் மருத்துவ பயன்கள் என்ன?…

76
Spread the love

 சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
* சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வர, கடுஞ்சளி  மூன்றே நாட்களில் குணமாகும்.
* சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
* சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
* சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.
* சுக்கு, கருப்பட்டி, மிளகு  சேர்த்து, ‘சுக்கு நீர்’ காய்ச்சிக் குடித்துவர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
* சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மையாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
* சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
* சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
* சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று
தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

LEAVE A REPLY