மருந்து கொடுங்க…. திருச்சி போலிசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

216
Spread the love

திருச்சி மிளகு பாறை அரசு பிசியோதெரபி கல்லூரியில் நேற்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக வந்த 300 ரெம்டெசிவிர் மருந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 180 ரெம்டெசிமர் விற்பனை செய்யபட்டது.  இன்று காலை ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக அதிகாலையில் இருந்து ஏராளமான மக்கள் வந்தனர். அரசு பிசியோதெரபி கல்லூரி நுழைவாயில் இன்று விடுமுறை என அறிவிப்பு பலகை வைத்திருக்கப்பட்டிருந்தாலும் அதனை கண்டுகொள்ளலாமல் பொதுமக்கள் மருந்து வாங்க அதிகாலை முதலே காத்திருக்க தொடங்கினர்.  மேலும் மேலும் கூட்டம் வந்து கொண்டே இருந்ததால் போலீசார் அவர்களை திரும்பி செல்ல அறிவுறுத்தினர். அனால் அவர்கள் அதனை

ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் சிலர்…… நேற்று மாலை மருத்துவமனை முதல்வர் நாளை விற்கப்படும் என்று தெரிவித்திருந்தார் ஆகையால் தான் வந்தோம் இன்று அறிவிப்பு பலகை விடுமுறை என்று உள்ளது ஆனால் மருந்தை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

LEAVE A REPLY