பரிசுப்பெட்டி கட்சி 13 லட்சத்த தரலையாம்.. சகாயம் சொல்றார்

240
Spread the love

‘ யோவ் சுப்புனி கைய கழுவ சோப்பு வைக்க மாட்டியா?’ என ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி சீரியசாக கேட்க ’ விடு சாமி, கைய கழுவிட்டு வந்து உட்காரு’ என்றார் சந்துக்கடை பாய். ‘ இந்த கொரோனா எல்லாத்தையும் முடக்கிடுச்சே? அரசியல் வாதிங்களே ஆடிப்போய் இருக்காங்க.. எல்லாத்துக்கும் பயம் வந்துடுச்சு’ என்றார் பாய். ‘ அட நீ வேற பாய்,  யாரும் பயப்படுற மாதிரி தெரியல’ என சகாயம் கொக்கிபோட.. ‘ என்ன சகாயம் விஷயத்த சொல்லு’ என்றார் பார்த்தா. ‘ எம்பி எலெக்‌ஷன் எப்போ நடந்துச்சு.. அதுக்கு நோட்டீஸ், பேனர், போஸ்டர் என 13 லட்சம் பாக்கிய தரமா அலைய வி டுறாங்களாம் அந்த கட்சிக்காரங்க… பாவம் அந்தப்பையன்’ என்றார் சகாயம்.            ‘ என்னையா கொடுமையா இருக்கு. இரண்டுல எந்த கட்சி இந்தவேலைய செய்யறது ‘ என பாய் கேள்விக்கேட்க ‘ நீங்க நினைக்கிற இரண்டு கட்சியும் இல்ல பாய்.. குக்கர் காருங்க தான்’ என்றார் சகாயம். ‘ யோவ் குக்கர் ஆர்கே நகர்ல மட்டும் தான்.. எம்பி எலக்‌ஷன்ல பரிசுப்பெட்டி தான் சின்னம்‘ என விளக்கம் அளித்தார் பார்த்தா. ‘ ஆமால்ல, பரிசுபெட்டி ஆட்களுக்காக தான் 13 லட்சத்துக்கு பேனர், நோட்டீஸ், போஸ்டர் அது இதுனு அந்த லித்தோஸ் காரங்கிட்ட வேலை வாங்கிட்டு பாக்கி வச்சுருக்காங்களாம்..’  என சகாயம் விளக்கம் அளித்தார். ‘ செலவுக்கு தான் கட்சி கொடுத்துச்சே அப்புறம் ஏன்?ன்னு தெரியல‘ என பார்த்தா இழுக்க.. ‘ சரி சாமி, எனக்கு வெஸ்டரி ஸ்கூல் வர்றைக்கும் வேலை இருக்கு’ என பாய் கிளம்ப.. பெஞ்ச் காலியானது.. 

LEAVE A REPLY