ஆவின் வாழ்க்கையில சிஐடி விளையாடிட்டதா சொல்றார் பார்த்தா….

316
Spread the love

‘ என்னைய்யா சுப்புனி இப்படி 3 நாளு கடைய மூடிபுட்ட‘ என பொன்மலை சகாயம் கேட்க ‘ என்ன பண்ண அண்ணாச்சி, எங்க அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் ஊருக்கு போயிட்டேன்’ என்றார் சுப்புனி. ‘ அதுசரி நீ பாட்டுக்கு கடைய மூடிகிட்டு போனா, நாங்க எங்கய்யா போய் உட்கார்றது’னு சந்துக்கடைபாய் நியாயமான வருத்தத்தை  கக்கினார். ‘ சரி பாய் விடுங்க, எத்தன காபி’ என கேட்டு விட்டு கடைக்குள் போனார் சுப்புனி. ‘ பாய், கச்சேரி எப்படி இருந்துச்சு சொல்லவே இல்லையே?‘னு கேள்வியுடன் கடை பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்தார் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி.

‘ பரவாயில்ல சாமி, ஸ்பான்சர் ஒருத்தரோட பெயர சொல்லனு அந்த கம்பெனி ஆளுங்க கிளம்ப, கொஞ்ச நேரம் சலசலப்பாயிடுச்சு’ என கச்சேரி களேபரத்த சொன்னார் பாய். ‘ சுப்புனி ஆவின் பால் தான?’ என சகாயம் கேட்க ‘ ஆமாய்யாபால் ஆவின் தான் சந்தேகம் என்ன? பாவம் ஆவின் சேர்மன கழட்டு விட்ட விவகாரம் தான் ஆளுங்கட்சியில ஹாட் டாப்பிக்’ என்றார் பார்த்தா.  ‘ அடபோங்கய்யா, ஓரு குரூப் அவர கழிட்டி விட்டதாக சொல்லிட்டு இருக்காங்க. ஆனா  எக்ஸ்ஆவின் சேர்மன் குரூப் கீழே விழுந்தாலும் மண் ஒட்டாத கதையா..  நமக்கு மா.செ கொடுக்கப்போறாங்கல்ல, அதான் நானே சேர்மன் வேணாமுனு சொல்லிட்டேனு, எங்க ஆளு சொல்லுறாருனு கிளப்பி விடுறாங்க’ என்றார் சகாயம். ‘இந்த விஷயத்துல சிஎம் தான் முடிவு எடுத்ததா சொல்றாங்க. பொட்டிக்கடை விஷயத்துலேந்து சினிமா கம்பெனி விஷயம் வரை எல்லாத்துக்கும் உங்க பெயரத்தான் பயன்படுத்துறாப்புலனு, எஸ்பிசிஐடி காரங்க ரிப்போர்ட் போட்டது தானாம், இனிமே ஆளு தலை எடுக்க வாய்ப்பு இல்லனு அவருக்கு ரொம்ப நெருக்கமான கரூர்காரங்களும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க பாய்’ என கிடைச்ச விசயங்கள அடுக்கி விட்டு கிளம்பினார் பார்த்தா. ‘யோவ் சகாயம், உங்க ஊர்ல எதுவும் விஷயம் உண்டா?’ னு சந்துக்கடை பாய் பீடிகை போட.. சந்தேக பார்வையுடன் பார்த்தார் பொன்மலை சகாயம்.. 

LEAVE A REPLY