மாமனாருக்காக “அதிகாரி மருமகன்” செம கேன்வாசாம்.. ஸ்ரீரங்கம் பார்த்தா சொல்றார்..

388
Spread the love

இது சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

‘என்ன சாமி மார்கெட்டுக்கு போய்டு வர்ற மாதிரி தெரியுது?’ என்கிற பொன்மலை சகாயத்தின் கேள்விக்கு தலையை மட்டும் ஆட்டி விட்டு டூவீலரை நிறுத்தினார் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி.. ‘ சுப்புனி, சாமிக்கு ஒரு ஸ்டிராங் போடு’ என்ற சகாயம்..        ‘ மார்கெட்டு திரும்பவும் எங்க ஊருக்கு வந்துடுச்சு’ என்றார்.  ‘ ஆமா சகாயம், ஆனா எங்க தொகுதி வேட்பாளர், நான் வந்ததும் எல்லா மார்கெட்டையும் கள்ளிக்குடிக்கு மாத்திபுடுவேனு சொல்லிட்கிட்டு இருக்கார் தெரியுமா?’ என பார்த்தா சொல்ல..‘ எந்த வேட்பாளர்?.. அந்த ஹைடெக் வேட்பாளரா..?’ என சகாயம் சந்தேகத்தை கிளப்ப.. ‘ ஆமா சகாயம், இந்த எலெக்‌ஷன்ல மாமனார் ஓட்டு கேட்டது மட்டும்  தான். அரசு அதிகாரியான மருமகன் மாமனாருக்காக போன்லேயே பெரிய அளவில் கேன்வாஸ் பண்ணியிருக்கார். எல்லா பத்திரிக்கை ஒனர்ங்களுக்க போன் போட்டு, நான் செய்தித்துறையில் இருந்த போது உங்களுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணேன், அதுனால ‘பேக்கேஜ்’ எல்லாம் தர முடியாது. எனக்கு நீங்க கைமாறா செய்தி, போட்டோ போட்டு தரணும்னு உரிமையா கேட்டு வாங்கி செலவ பாதியா குறைச்சுருக்கார்.. அதோட தனக்கு மலைக்கோட்டை மாநகரத்துல இருக்குற வேண்டிய அதிகாரிகளுக்கு போன் போட்டு தொகுதி எப்படி இருக்கு? மாமாவுக்கு ஒட்டு போட்டுடுங்க.. இல்லனா உங்க சொந்தம் பந்தம் இருந்தா ஓட்டு போட சொல்லுங்கனு கேன்வாஸ் பண்ணியிருக்கார்..அதனால தான் வேட்பாளரான மாமனார் நான் அடுத்த மந்திரினு நெருக்கமானவங்க கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டாரு.. அதோட வெளிப்பாடு தான் கள்ளிக்குடி மார்கெட் பேச்சு’ என ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி பேசி முடிக்க.. ‘ சரி சாமி ரிசல்ட் எப்படியிருக்கும்? அத சொல்லு..’ என சகாயம் திருப்பி கேள்வி கேட்க .. ‘ என்னப்பா காலையிலேயே சூரியன் சுள்ளுனு ஏறுது.’ என புரியாதபடி பதில் அளித்து விட்டு காய்கறி பைகளை எடுத்துகிட்டு டூவீலரை நோக்கி சென்றார் பார்த்தசாரதி.. 

LEAVE A REPLY