நீதிபதி முன்பு கழுத்தை அறுத்துக்கொண்ட கொலை குற்றவாளி……

169
Spread the love

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் கொலை வழக்கு ஒன்றிற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு அவர் போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அப்போது சிறைத்துறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக சத்தமிட்டு கொண்ட, நீதிபதி ரவி முன்பு, பாண்டியன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நீதிபதி உத்தரவிட்டார். அப்போது இது தொடர்பாக தான் கடிதம் எழுதி தருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாண்டியன், நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைகாக சேர்த்து உள்ளனர். 

LEAVE A REPLY