இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (89) முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 24-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி தா.பாண்டியன் நேற்று காலை இறந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.