முதுகெலும்பு இல்லாத ஆட்கள்.. ஓபிஎஸ் மகனை பார்த்து டிஆர் பாலு நக்கல்

300
Spread the love

பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் இல்லை என இன்று பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசிக் கொண்டிருக்கும் போது இடைமறித்து பேச முயன்றார் அதிமுக உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், இதனால் ஆவேசமடைந்த டிஆர் பாலு “முதுகெலும்பு உள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த அவை முதுகெலும்பு உள்ளவர்களால் நிரம்பியது. உங்களைப் போன்றவர்களுக்கு பேச என்ன இருக்கிறது, முதுகெலும்பு இல்லாத நீங்கள் உட்காருங்கள் ’என டிஆர் பாலு சிரித்துக்கொண்டே கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவீந்திரநாத் பேச முற்பட திமுக உறுப்பினர் கனிமொழி சபாநாயகரிடம் முறையிட்டார். சபாநாயகர் உடனே ரவீந்திரநாத்தை அமரச் சொன்னார். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY