சாகர் சாகசம்.. தொடர் இந்தியா வசம்

313
Spread the love

இந்திய வங்கதேச அணிகள் இடையே இறுதி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியை வங்கதேசமும், 2வது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றிருந்ததால் தொடரை கைப்பற்றும் அணி எது என்பதை முடிவு செய்யும் போட்டியாக இந்த போட்டி அமைந்தது.

 டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித், தவான் சோபிக்க தவறினர். சர்மா 2 எடுத்து ஏமாற்ற, தவான் 19 ரன்னில் வெளியேறினார் .இதனால் இந்திய அணி 150 ரன்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஆனால் அதன்பின் யாமிருக்க பயம் ஏன் என்று ராகுலும், ஸ்ரேயாஸ்ம் வெளுத்து வாங்கினர் .ராகுல் 35 பந்தில் 52 ரன்னும். ஸ்ரேயாஸ் 33 பந்தில் 62 ரன்கள் குவிக்க ரன் எகிறியது.

கடைசி கட்டத்தில் பாண்டே 22 ரன் எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நம்பிக்கையின்றி வங்கதேசம் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 9 ரன்னில் வெளியேற, முகமது நசீம் அசத்தலாக ஆடினார்.இதனால் ரன் ரேட் எகிற தொடங்கியது.ஆனால் இந்திய பவுலர்கள் அவர்களை  தலை தூக்க விடவில்லை, அதிலும் குறிப்பாக துபே 81 ரன் எடுத்திருந்த நஜீமை வெளியேற்ற  ஆட்டம் இந்தியா வசம் வந்தது.

அதன்பின் தீபக் சாகர் புல்புல் புயலாக மாறி வங்கதேசத்தை துவம்சம் செய்தார்.அவர் 4 ஓவர் வீசி 7 ரன் மட்டும் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இதனால்  வங்கதேசம் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையடுத்து  2 _1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.தீபக் சாகர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றதுடன் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

LEAVE A REPLY