விஜய் மல்லையா குழப்பம்…

177
Spread the love

லண்டனில் வங்கிகளுக்கு தான் செலுத்த வேண்டிய மொத்த அசல் தொகையையும் வங்கிகள் எடுத்துக்கொள்ளட்டும் என தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர் பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அவரை நாடு கடத்துவதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து, மல்லையா தொடர்ந்த வழக்கில் கடந்த மூன்று நாளாக நடைபெற்ற விசாரணை நேற்றுடன் பிப்.,13 முடிவடைந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான பின் மல்லையா செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது: நான் எந்தவிதமான பண மோசடியிலும் ஈடுபடவில்லை. இந்திய வங்கிகளிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நான் செலுத்த வேண்டிய அசல் தொகையில் 100 சதவீத பணத்தையும் வங்கிகள் எடுத்துக்கொள்ளுங்கள். அமலாக்க இயக்குநரகம், சொத்துகள் மீது தங்களுக்கு உரிமையுள்ளது என்கிறது. எனவே, ஒருபுறம் அமலாக்க இயக்குநரகமும், மறுபுறம் வங்கிகளும் ஒரே சொத்துக்கு எதிராக போராடுகின்றன. இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY