காவல் துறையில் அனைத்திலும் தமிழ்..டிஜிபி

196
Spread the love

தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தமிழ் வளர்ச்சித்துறை இயக்கக அதிகாரிகள் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தனர். இது தொடர்பாக தமிழ் வளர்ச்சிதுறை பணியாளர்கள், காவல்துறை அலுவலக பணியாளர்கள் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன்பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்து பதிவேடுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட வேண்டும், அனைத்து கடித தொடர்புகளும், குறிப்பாணைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். அனைத்து காவல் வாகனங்களிலும் தமிழில் காவல் என்று இடம் பெற்றிருக்க வேண்டுமெனவும், அனைத்து அலுவலக முத்திரைகளும், மற்றும் பெயர் பலகைகளும் தமிழில் மாற்ற அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது குறித்து  தலைமை அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும், பிற காவல் அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு டிஜிபி திரிபாதி அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY