எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 2015 முதல் 2016 வரை, 10 முதல் 19 வயதுடையவர்களில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு 160 பேருக்கு மட்டுமே இருந்த நிலையில், 2017- 18ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 187-யாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2018 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 99 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் 2017 வரை, 20 முதல் 25 வயதுடையவர்களில் 432 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் 2017 முதல் 2018ம் ஆண்டில் 554 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 2018 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நடைபெற்ற பரிசோதனைகளில் 318 பேருக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
2017 முதல் 2018ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 699 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 2018 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 435 பேருக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், கடந்த 2003ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்தனர். இந்நிலையில் இது 2018ம் ஆண்டில் 9.54 சதவீதமாக குறைந்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது.