நடிகர் பொன்னம்பலத்திற்கு தமிழக பாஜ 2 லட்சம் நிதி உதவி

413
Spread the love

வில்லன் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். அவரது குழந்தைகள் படிப்பு செலவுத்தொகையினை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் ரஜினி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் முருகன் இன்று நடிகர் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார். பின்னர் அவரது மருத்துவ சிகிச்சைக்காக பாஜக சார்பாக 2 லட்ச ரூபாயினை வழங்கினார். அப்போது பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் மற்றும் கலை கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் உடனிருந்தனர்.

LEAVE A REPLY