தமிழகத்தில் முழு ஊரடங்கு… தமிழக அரசு…

135
Spread the love
கொரோனா இரண்டாவது அலை அதீதமாக பரவி வருகிறது.  தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் 24,898 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.  இது வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 195  பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 974 ஆக கூடி உள்ளது.  திருச்சியில் நேற்று 746 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலானவர்கள் ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று கருத்து சொல்லி உள்ளனர். முக்கியமாக சுகாதாரத்துறையினர் ஊரடங்கை மிக உறுதியாக வலியுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக மீண்டும் 15 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
 

கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி காலை 4 மணி முதல் முதல் 24-ந்தேதி காலை 4 மணி  வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

பொது போக்குவரத்து முற்றிலும் நடைபெறாது. 

சுற்றுலா தலங்கள், கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

கல்வி நிறுவனங்களில் கோடைகால பயிற்சி நடைபெறாது.

ஐடி நிறுவனங்கள் இயங்க தடை. விதிவிலக்கு அளிக்கப்பட்டதை தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை. 

வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். 

தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது.

உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி.

காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.

அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.

திருமணம், இறுதி சடங்கு, நேர்முக தேர்வு, மருத்துவமனை செல்ல உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY