ஒரு போலீசுக்கு 1300 ரூபாய் நஷ்டம்..?.. அதிகாரிகள் கவனிப்பார்களா?..

312
Spread the love

 தேர்தல் பணியில் ஈடுபட்ட தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும்  68 நாட்களுக்கு தேர்தல் பணி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக காவலர்களுக்கு நாளொன்றுக்கு 200 ரூபாயும், உயர் அதிகாரிகளுக்கு 300 ரூபாயும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. சம்மந்தப்பட்ட 68 நாட்களில் ETR மற்றும் feeding தொகை பெற்றிருந்தால் அந்த நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மீதமிருக்கும் நாட்களுக்கு முழு அளவான TA (200 and 300) தொகையை வழங்குவதுதான் வழக்கமான ஒன்று. அதுமட்டுமில்லாமல் GO No 478 இல் இரண்டாவது பத்தியில் rule 17 examption கொடுக்கப்பட்டுள்ளது. Rule 17 என்பது என்னவென்றால் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பெயரில் ஒவ்வொரு மாதமும் வழங்கக் கூடிய TA தொகையானது அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 5% மிகாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்கு விலக்கு அளிக்கும் வகையில் தான் GO No 478 மூலமாக (விளக்கு கொடுக்கப்பட்டு) நாளொன்றுக்கு 200 மற்றும் 300 வழங்கலாம் என்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாவட்டங்களில் கருவூலத் துறை அலுவலர்கள் (GO no 478 )இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடந்த ஆண்டு அரசால் கூறப்பட்ட corona காலத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் 25% TA தொகை குறைப்பு என்கிற அரசாணையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு கணக்கிடுவதாக புகார் எழுந்துள்ளது.  போலீசாருக்க முறைப்படி ரூ 5200 கிடைக்கப்பெற வேண்டும், ஆனால் கருவூல அலுவலர்கள் கணக்கின்படி பார்த்தால் 3900 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதனால் ஒருவருக்கு ரூ 1300 இழப்பு ஏற்படும்.  எனவே இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு கருவூல அலுவலர்களுக்கு அறிவுறுததுவார்களா?… 

LEAVE A REPLY