அவங்க சொல்லிட்டாங்க…. நாங்க என்ன செய்ய.. புழுங்கும் பிரஸ்

343
Spread the love

தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் கடந்த 2 நாட்களாக முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களாக கொடுத்து  வருகின்றனர். இது பலருக்கும் தெரிந்த விஷயம்… தெரியாமல் நடக்கும் விவகாரங்கள் என்னென்ன தெரியுமா? இந்தியாவில் ஆங்கில நாளிதழ்களில் விளம்பர மாடலாக கருதப்படும்  முக்கிய பத்திரிக்கை கேரளாவில் 2 பதிப்புகளை மூடி விட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள 4 பதிப்புக்களில் 2 பதிப்புக்களை மூடப் போகிறது. தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ் அதிரடியாக சம்பளத்தைக் குறைந்திருக்கிறது. ரூ 25 ஆயிரம்வரை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 10 சதவீதமும்,அதற்கு மேல் பெறுவோருக்கு 20 சதவீதமும் குறைத்திருக்கிறது.அதன் தமிழ் பதிப்பு, ஊழியர்களுக்கு தந்த சம்பளமோ 30 சதவீதம் தான். தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ் இந்த மாதம் சம்பள குறைப்பு மட்டுமல்லாது 55 வயதுடைய ஊழியர்கள் கணக்கெடுக்கப்பட்டு கட்டாய ஒய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த குழுமத்தின் மாலை நாளிதழ் 58 வயது முடியும் நிலையில் இருந்த ஊழியர்களுக்கு கட்டாய ஒய்வு கொடுத்துக்கொண்டிருக்கிறது.  ஒரு நாளிதழின் குறிப்பிட்ட சில எடிசன்களில் மட்டும் ஆட்கள் குறைப்பு சத்தம் இல்லாமல் நடக்க ஆரம்பித்திருக்கிறது. வார இதழ்களின் நிலைமை கடந்த சில ஆண்டுகாலமாகவே மிகவும் மோசம் தான்.. ஒரு  வார இதழில் சம்பளம் குறித்து சில மாதமாகிறது. இப்படியாக வார இதழ்கள்,  நாளிதழ்கள் சம்பளத்தை குறைப்பதா? ஆட்களை குறைப்பதா? என்கிற நிலையில் யோசித்துக்கொண்டிருக்க . கடந்த 30 ஆண்டுகாலமாக இருந்து விட்டு திடீரென 55 வயதாகி விட்டது என்றோ திடீரென 30 சதவீத சம்பளத்தை குறைத்துக்கொள் என்றே கூறும் பட்சத்தில் என்ன செய்வது என்கிற நிலையில் ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் புழுங்கிக்கொண்டிருக்கின்றனர்.முதலாளிகள் தங்களது தொழிலின் பிரச்சனைகளை வெட்டவெளியாக்கி விட்டனர்.  அனைத்து தரப்பினரின் குறைகளையும் வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் சம்பளம் குறைப்பு, ஆட்கள் குறைப்பு போன்ற குறைகளை இருட்டிலேயே வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

 

LEAVE A REPLY