செப்.27 முதல் சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவிற்கு சிறப்பு ரயில்கள்!..

52
Spread the love

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை.  இதனைதொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட அரசு, கடந்த 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்களையும் கடந்த 1ம் தேதி முதல் பேருந்து சேவைகளையும் இயக்க அனுமதி அளித்தது. அதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செப்.27 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY