தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

117
Spread the love
தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் வெப்பம் தணியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம் நாகை, கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY