etamilnews
Spread the love

தேவையான பொருட்கள் :
கோழி லெக்பீஸ் 4, எண்ணெய் தேவைக்கேற்ப
ஜிலேபி பவுடர் அரை சிட்டிகை
மைதா மாவு 50 கிராம்
கடலை மாவு 50 கிராம்
சில்லி சிக்கன் பவுடர் 50 கிராம்
எலுமிச்சை பழம் 1
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
முட்டை 1 (வெள்ளை கரு மட்டும்)

செய்முறை : கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் மாக சிறிது கீறல் போடவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில் சிக்கனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கோழிகறியை அதில் போட்டு நன்கு வேக விடவும். கறி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும். அடுப்பை குறைவான தீயில் இருப்பது மிகவும் முக்கியம். கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்தால் சுவையான தந்தூரி சிக்கன் தயார்.

LEAVE A REPLY