திருச்சி டாஸ்மாக்கில் போலீஸ் பாதுகாப்புடன் முன்னேற்பாடுகள் ஜரூர்…..

337
Spread the love
தமிழகத்தில் கொேரானா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் மது பானக்கடைகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வௌியிடப்பட்டது. அதன்படி……
மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்க கூடாது. 
  • ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
  • 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.
  • கடைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்
உள்ளிட்ட 14 வழிகாட்டுதல் நெறிமுறைகள் வௌியிடப்பட்டுள்ளன.  இதன் காரணமாக திருச்சியில் உள்ள டாஸ்மாக் மது பான கடைகளுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தௌிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளுக்கு முன்பு
 
 
தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, அதற்குள்ளே சமூக இடைவௌி விடும் வண்ணம் வட்ட அடையாளம் இடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

LEAVE A REPLY