சத்து மிக்க சுவையான பன்னீர் 65…

111

குழந்தைகளுக்கு மாலை வேலையில் செய்து சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்: – பன்னீர் – 200 கிராம், கார்ன் மாவு – 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு எலுமிச்சை சாறு – சிறிதளவு.

செய்முறை: முதலில் ஒரு பவுலில் கார்ன் மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் மற்றும் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் சின்ன சின்ன துண்டுகளாக பன்னீர் சேர்த்து கலந்து வைக்கவும். 5 நிமிடத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  பன்னீரை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் 65 ரெடி.

LEAVE A REPLY