சுவையான வெந்தயப் பணியாரம் ரெடி…

26
Spread the love

தேவையான பொருட்கள்.:
பச்சரிசி – 200 கிராம்,
உளுந்து – 6 டீஸ்பூன்,
வெந்தயம் – ஒன்றரை டீஸ்பூன்,
வெல்லம் – 200 கிராம்,
ஏலக்காய் – 2,
நெய் – 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 10 டீஸ்பூன்,
சோடா உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாகக் கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். இதைப் புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சுைவயான வெந்தய பணியாரம் ரெடி….

LEAVE A REPLY