Air INDIA இனி TATA Airlines.. கவர் ஸ்டோரி..

87
Spread the love

நன்றி : அரசியல் அடையாளம்.. 

மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து கொரோனா சூழலுக்கு பின்பு கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், ஏர் இந்தியாவை டாடா குழுமம் 18, 000 ஆயிரம் கோடிக்கு வாங்கி விட்டதாக இன்று அதிகாரப்பூர்வாமாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்தத் தகவலை ப்ளூம்பெர்க் மற்றும் மனி கண்ட்ரோல் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஜே.ஆர்.டி டாடாவில் 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத்தான் மத்திய அரசு 1953-ம் ஆண்டு நாட்டுடமையாக்கியது. இந்தநிலையில், தற்போது 67 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விமான நிறுவனத்தை டாடா மீண்டும் கைப்பற்றுகிறது.

 

LEAVE A REPLY