தமிழகத்தில் நாளை முதல் டீ கடைகள் திறக்கலாம்….- தமிழக அரசு

168
Spread the love

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்நிலையில் அதிக பரவல் உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் திறக்கலாம் என்று அறிவிப்பு வந்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து டீக்கடையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…… நோய் பரவல் கட்டுக்குள் வராத 11 மாவட்டங்களை தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். ஆனால் பார்சல் முறையில் மட்டுமே தேநீர் வழங்கிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY