ஆசிரியர் குத்திக்கொலை…பள்ளி அருகே பயங்கரம்!

683
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார வளமைய சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் 3 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே வடிவேல் முருகன், பிரியா (28) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளி அருகே முதல் மனைவியின் சகோதரர் அற்புத செல்வத்துக்கும், வடிவேல் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அற்புதசெல்வம் வடிவேல் முருகனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். வடிவேல் முருகன் கெஞ்சியும் அவரை விடவில்லை. இதையடுத்து வடிவேல் முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த, புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் அங்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY