ஆசிரியர்கள் ஒழுக்கம் கற்கவேண்டும்.. அமைச்சர் கடுகடு

165

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் சற்று முன் அளித்த பேட்டி; தமிழக அரசு பள்ளிகளில் இனி பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் இசை, ஓவியம், நடன பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் முன் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். மாறுதல் கிடைக்காததால் ஒரு ஆசிரியை தரையில் அழுது புரண்டது ஒழுக்கக் கேடு. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒழுங்காக பணி செய்தால் இவை அனைத்தும் சீராகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY