Spread the love

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில்  ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், 2ஆம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில் தேர்வுக்கான அட்மிட் கார்டு http://www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY