தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் கார்த்தி….

46
Spread the love
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தற்போது படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோ சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள கார்த்தி, முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
நடிகர் கார்த்தி கைவசம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

LEAVE A REPLY