கொரோனாவுக்கு சிகிச்சை.. திருச்சி கேஎம்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பலி ..

575
Spread the love

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (55). ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். ஒரத்தநாடு ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்தவர். தற்போது ஒரத்தநாடு திமுக ஒன்றிய  செயலாளராக இருந்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காந்தி, கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்தார். 16ம் தேதி லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து  திருச்சி கேஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த காந்தி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இறந்த காந்திக்கு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.. 

LEAVE A REPLY