போதையில் கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தை..

181
Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (60). நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகள் வெங்கடலட்சுமி(21). இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீனா(25) என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். யுகாதி பண்டிகைக்கு கணவருடன் வெங்கட லட்சுமி வந்திருந்தார். அருணாச்சலம் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் அருணாச்சலம் மனைவியை கொன்று விடுவதாக கூறி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை நோக்கி நீட்டியிருக்கிறார்.. அப்போது வெங்கடலட்சுமி தாயாரை காப்பாற்ற குறுக்கே வரும் சமயத்தில் அருணாசலம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் வெங்கடலட்சுமியின் வலது மார்பில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். சில நொடிகளில் நடந்த சம்பவத்தில் போதை தெளித்த அருணாசலைம் தனது மகள் வெங்கடலட்சுமியை தூக்கிக்கொண்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வெங்கடலட்சுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மகளை கொலை செய்த தந்தை அருணாச்சலத்தை தளி போலீஸார் கைது செய்தனர். 

LEAVE A REPLY