திரிசங்கு நிலையில் வாசன்

183
Spread the love

திமுகவுடன், தமாகா., நட்பு கட்சியாக இருந்தது. சமீபத்தில் சோனியா, ராகுல் சென்னை வந்த பின், தமாகாவுடனான நட்பிலிருந்து திமுக விலக துவங்கியுள்ளது. சமீபத்தில் வாசன் பிறந்தநாள் விழா நடந்தது. அவருக்கு  மாஜி ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர், பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் திமுக, தரப்பிலிருந்து யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாசன், பூங்கொத்தும், வாழ்த்து கடிதமும் அனுப்பினார். ஆனால், வாசனை, ஸ்டாலின் கண்டு கொள்ளாதது, தமாகாவில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே முதல்வர் பழனிசாமியை, தமாகா இளைஞரணி மாநில தலைவர், யுவராஜ் சந்தித்து புயல் நிவாரண நிதி வழங்கினார். ஒரு மாதத்திற்கு முன், முதல்வரை ஞானதேசிகன் சந்தித்து பேசினார். திமுக கூட்டணியில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட, வாசன் விரும்பினார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற வாசன், அன்று மாலை, சோனியா, ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு செல்லவில்லை. இதை சிலர் ராகுலிடம் புகாராக தெரிவித்தனர். திமுக, கூட்டணியில்  வாசன் வெற்றி பெற்றால், அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டியது வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமாகாவை சேர்க்க ராகுல்  முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

LEAVE A REPLY