மலேசிய தங்க கட்டிகளை கொண்டு வந்த ‘புதுகை குருவி ’ திருச்சியில் சிக்கியது

172
Spread the love

 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று காலை திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த ஜென்சி ஜோசப் என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர் கைப்பையை சோதனையிட்டனர். சோதனையில் ஜோசப் ரூபாய் 41.67 லட்சம் மதிப்புள்ள 1250 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மலேசியாவைச் சேர்ந்த  சிலர் தங்க கட்டிகளை கொடுத்து திருச்சி விமான நிலைய வாசலில் இருக்கும் ஒரு நபரிடம் கொடுத்து கொடுத்து விடுமாறும் அப்போது கோடு வேர்டு (code word) ஒன்றையும் சொல்லி கொடுத்து அனுப்பியுள்ளனர். சொன்னது போல் செய்தால் அந்த நபர் தங்கட்டிகளை பெற்றுக்கொண்டு 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பார் என்றும் கூறியிருந்ததாக ஜென்சி ஜோசப் கூறினார். இதனையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளியில் சென்று சந்தேகநபரை தேடினர். ஆனால் யாரும் இல்லை. 

LEAVE A REPLY