தர்பாரை கேபிளில் ரிலீஸ் செய்த மதுரை சேனல்…

120

தமிழ் ராக்கர்ஸில் இருந்து தர்பார் படத்தை டவுன்லோடு செய்த யாரோ ஒருவர் 3 பாகங்களாக பிரித்து வாட்ஸ் ஆப்பில் முழு திரைப் படத்தையும் பரப்பினார். இத்துடன், தர்பாரின் வசூலை அடித்து நொறுக்குவோம் என்ற ஆடியோவுடன் இந்த தர்பார் படத்தின் முழு வீடியோவும் பரப்பப்பட்டதால் தமிழ்த் திரை உலகினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் சரண்யா டிவி என்ற உள்ளூர் தொலைக் காட்சியில் ரஜினியின் தர்பார் திரைப்படம் சட்ட விரோதமாக ஒளிப்பரப்ப பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சரண்யா தொலைக்காட்சி உரிமையாளர் மீது ரஜினி மக்கள் மன்றத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY