Spread the love

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ், பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நேற்று கேரளாவில் ’மகளிர் சுவர்’ பேரணி நடந்தது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தனர். போலீஸ் அனுமதி, பாதுகாப்புடன் அவர்கள்  வழிபாடு செய்தனர். 18 படிகள் ஏறாமல் பின் வாசல் வழியாக சென்று வழிபாடு செய்யும் வீடியோ இன்று வெளியானது. இதையடுத்து சன்னிதான நடை திடீரென அடைக்கப்பட்டது. இதற்கான காரணம் முறையாக வெளிவரவில்லை. ஆனால் பெண்கள் வழிபாடு நடத்தியதால்  கோயிலை புனிதப்படுத்துவதற்காக நடைஅடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

LEAVE A REPLY