கொரோனா பாதித்த குழந்தைகளின் நிலை?…. லாரன்ஸ் அறிக்கை 

87
Spread the love
“நான் செய்த சேவை என்னுடைய குழந்தைகளை காப்பாற்றும். நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். நான் ஆதரவற்ற குலந்திகளுக்காக ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.
ஒரு வாரத்திற்கு முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது.” “பரிசோதனை செய்த போது 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. இதில் 2 மாற்று திறனாளி பணியாளர்களும் அடக்கம். இது எனக்கு அதிக வருத்தத்தை கொடுத்தது. அதன் பிறகு டாக்டர்களிடம் பேசியபோது அவர்கள் சிகிச்சையில் வேகமாக உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்தனர். அவர்களுக்கு காய்ச்சல் குறைந்து தற்போது இயல்பான நிலைக்கு வந்திருக்கிறது.”  “அவர்களுக்கு கொரோனா பரிசோதனை டெஸ்ட் நெகட்டிவ் வந்த பிறகு அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என கூறியுள்ளனர்.”
“இந்த சூழ்நிலையில் உதவிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு நன்றி. மேலும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பிஏ ரவி சார் மற்றும் கார்ப்பரேஷன் கமிஷ்னர் ஜி.பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி.”
“நானா செய்த சேவை என் குழந்தைகளை காப்பாற்றும் என நம்புகிறேன். அனைவரும் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள். சேவை தான் கடவுள்” என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
 

 

LEAVE A REPLY