Spread the love

மும்பையில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக விட்டது. மும்பை, தானே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மும்பை சென்ட்ரல்- துறைமுகம் வழிதடம் வெள்ள நீரால் சூழப்பட்டு ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

சென்னை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், டெக்கான் கியூன் மற்றும் கொனார்க் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அதே போல் மும்பை வந்து செல்ல வேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாக வந்து செல்கிொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கனமழை காரணமாக மராட்டிய மாநிலத்தில் பல அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது, மித்தி, பார்வி, உல்காஸ் போன்ற ஆறுகளில் உள்ள நீர் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. தானே மாவட்டத்தின் கதவலி பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 10 குழந்தைகள் உட்பட 58 பேரை விமான படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். பல இடங்களில் கடல் நீர் ஊர்களுக்கும் புகுந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நவி மும்பை பகுதியில் 250 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் சில இடங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ நன்றி.. ஆதவன் நியூஸ்.

LEAVE A REPLY