விர‌லி ம‌ஞ்ச‌ளி‌ன் மக‌த்துவ‌ குணம்!…

372
Spread the love
 

‌விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பது ‌விர‌லி ம‌‌ஞ்ச‌ள். விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.

மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், அது பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது
 
மஞ்சள் இயற்கையான பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும், ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுகிறது, சிறிய வெட்டுக்காயமோ தீக்காயமோ ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் மஞ்சள் பொடியை சிறிதளவு தூவிவிட்டால், விரைவில் குணமடையும்.
 
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து, தினமும் ஒரு முறை அருந்தினால் ஜலதோஷம், இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
 
மஞ்சள் புற்றுநோயை எதிர்க்கும் குணம் கொண்டுள்ளது. மஞ்சளில் உள்ள சக்திமிக்க பல்வேறு உட்பொருள்கள் கதிர்வீச்சுகளால் ஏற்படும் கட்டிகள் உண்டாகாமல் பாதுகாக்கின்றன. T-செல் இரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் செல்கள் மற்றும் குடல் புற்றுநோய் செல்கள் போன்ற கட்டி செல்கள் பெருகுவதையும் மஞ்சள் தடுக்கிறது.

LEAVE A REPLY