Spread the love

ராஜஸ்தானின் ராஜஸ்தானின் சோபா சர் கி தானி என்ற பகுதியில் இன்று மதியம் மிக் 21 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியின் போது விபத்திற்குள்ளானது. இதையடுத்து பைலட் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.  பறவை மோதியதால் விபத்து ஏற்பட்டு, தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி தமிழக விமானி அபிநந்தன், தன்னுடைய மிக் 21 ரக விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் எப்-16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அப்போதுதான் பொதுமக்களிடையே இவ்வகை விமானம் பரிச்சயமானது. இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளனர். இதனால் மிக் விமானத்தை ராணுவத்தினர் ‘பறக்கும் சவப்பெட்டி’ எனவும், ‘விதவை தயாரிப்பாளர்’ என அழைப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY