Spread the love

சென்னை வானிலை மைய அதிகாரி இன்று தெரிவித்ததாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மூடு பனி அதிகம் காணப்படும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 21ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். 22 ஆம் தேதி அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY