ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இயக்குநர் ஏ எல் விஜய் ஒருபுறம் ‘தலைவி’ எனும் பெயரில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெ. வாழ்க்கையை படமாக்க முயன்று வருகிறார். மும்பை நிறுவனம் ஒன்று பாரதிராஜா இயக்கத்தில் ஜெ வாழ்க்கையை படமாக்க முயன்றது. ஆனால் பாரதிராஜா இதற்கு மறுத்துவிட்ட.தாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை “குயின்” எனும் பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. தற்போது அது வெப் சீரியலாக தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் `விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகாவும், பிரபல அரசியல்வாதியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்திருக்கின்றனர்.

ஜெ. இளமைத் தோற்ற  காட்சிகள் ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆராக மலையாள நடிகர் பிருத்திவிராஜின் சகோதரர் இந்திரஜித் நடித்துள்ளார். இந்த வெப் சீரியல்  விரைவில் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி, மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது. MX player டிஜிட்டல் தளத்தில் கட்டணமின்றி  பார்க்கலாம்.

 

 

LEAVE A REPLY