எம்பியாக ஆசைப்படும் ஓபிஎஸ் மகன்…. 25 ஆயிரம் கொடுத்து மனு வாங்கினார்

213
Spread the love
 தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வாங்கும்  நிகழ்ச்சி இன்று துவங்கியது.  இதனை கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர்.
முதல்நாளான இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் விருப்ப மனு வாங்கினார். இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன்,  கோகுலஇந்திரா, மாதவரம் மூர்த்தி, ஆர்.வி.எம்.கண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவகங்கை செந்தில்நாதன் உள்ளிட்டோர் விருப்பமனு விண்ணப்பங்களை 25 ஆயிரம் கொடுத்து வாங்கினர்.  

LEAVE A REPLY