etamilnews
etamilnews
Spread the love
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி பேசியது: ஆளுங்கட்சியுடன் இருந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. 18 பேர் பதவியை எடுத்துவிட்டு, தற்போது எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் தற்போது 3 பேர் எம்எல்ஏவாக உள்ளோம். என்னிடம் கொறடா தாமரை ராஜேந்திரன், ‘முதல்வர், துணை முதல்வர் உங்கள் மேல் கோபமாக உள்ளனர். உங்களுக்கு நோட்டீஸ் தருமாறு  கூறுகின்றனர், சபாநாயகரையும் நோட்டீஸ் விட கூறுகின்றனர்’ என்றார். ‘ஏற்கனவே 18 பேருக்கு நோட்டீஸ் விட்டபோது நாங்கள் ஏமாந்து விட்டோம். சபாநாயகருக்கு ஏற்கனவே ஒரு கை உடைந்துஉள்ளது. நீங்கள் என்னை நீக்க போடும் கையெழுத்துத்தான் கடைசி கையெழுத்து, அதன்பிறகு கையெழுத்து போட உங்கள் 2 பேருக்கும் கை இருக்காது’ என்று அவரிடம் சொன்னேன்.
 அத்துடன் அந்த பேப்பரை மூலையில் போட்டுவிட்டனர். எச்.ராஜா, ‘பெரியார் சிலையை அடித்து உடைக்க வேண்டும்’ என்கிறார். நமக்கு யோசிக்க கற்றுக் கொடுத்தவர் பெரியார். ஜெயலலிதா இருந்தால் இவர் இப்படி பேச முடியுமா? இவர்கள் தற்போது வைத்து இருக்கும் கூட்டணி மானங்கெட்ட, மரியாதை கெட்ட கூட்டணி. 400 கோடி கொடுத்து பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இவ்வாறு ரத்தினசபாபதி பேசினார்.

LEAVE A REPLY