திருச்சி புலிவலம் வாய்க்கால் துார் வாரும் பணி – விவசாயிகள் மகிழ்ச்சி

188
Spread the love

திருச்சி மண்டல நீர்வள ஆதாரத்துறை இன்று வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில்….  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமம், புலிவலம் மணற்போக்கியிருந்து செல்லும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவேண்டும் என்று உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை விடுத்திருந்தது.  இதன்படி பெட்டவாய்த்தலையில்,  காவிரி ஆற்றிலிருந்து உய்யக்கொண்டான் வாய்க்கால் பிரியும் இடத்தில் மணற்போக்கி அமைந்துள்ளது. இந்த மணற்போக்கி மூலம் செல்லும் வடிகால் வாய்க்காலானது புலிவலம் கிராமத்தில் ஆரம்பமாகி கொடிங்கால் வடிகாலில் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. இவ்வடிகால் வாய்க்கால் தூரி அடைந்தும், மண்மேடுகளிட்டும். செடிகொடிகள் வளர்ந்தும் நீரோட்டத்திற்கு தடையாக காணப்பட்டது. இதனால் மழை மற்றும் வெள்ளக்காலங்களில் வரும் கூடுதல் நீரினால் நீரோட்டம் தடையேற்பட்டு அப்பகுதி பாசன நிலங்கள் மற்றும் கிராம பகுதிகள் மிகவும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தன. எனவே விவசாயிகளின் கோரிக்கையின்படி மேற்படி புலிவலம் மணற்போக்கி வடிகால் வாய்க்கால் 1200 மீட்டர் வரை தூர்வாரும் பணிக்கு 29 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், மூன்று பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிதியின்கீழ் தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கொடியாலம் மற்றும் புலிவலம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று தொிவிக்கப்பட்டு உள்ளது. 

LEAVE A REPLY